உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நேற்று காலை 5:30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சந்நிதிமுன் உள்ள கொடி மரத்திற்கும், மீனாட்சி அம்மன் சந்நிதி முன் உள்ள கொடி மரத்திற்கும் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கொடிகள் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. சேது குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தார். மாலையில் காப்புக்கட்டுதலுடன் நிகழ்வு நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 12 தினங்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது. ஏப். 29 ல் திருக்கல்யாணம், மே. 3 ல் தேரோட்டமும், மே. 5 ல் தெப்பமும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்க்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !