உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராஜபாளையம் தென்காசி ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. கொடிமரம், பலி பீடத்திற்கு மஞ்சள் காப்பு கட்டிய பிறகு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று 7:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கொடி மரத்தில் நெற்கதிர்கள், மாலை சாத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியில் இருந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர். சிறப்பு நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மே 4ல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ரவிராஜா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !