தலத்தெரு தங்கமாரியம்மன் கோவிலில் அம்மன் வீதியுலா
ADDED :941 days ago
காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு ஸ்ரீதங்கமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் திருதெளிச்சேரி எனும் தலத்தெரு பகுதியில் உள்ள பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் ஆலயத்தில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடனும் விக்னேஸ்வர பூஜையுடன் சித்திரை திருவிழா துவங்கியது.நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ தங்க மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.முன்னதாக மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.