சீர்காழி செப்பேடுகள் கிடைத்த இடத்திற்கு திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என பெயர் சூட்டி வழிபாடு
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என பெயர் சூட்டி தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசாலை அமைக்க குழி தோண்டிய போது 23 ஐம்பொன் தெய்வத் திருமேனிகள், 462 தேவார பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைக்கப்பெற்றது. இந்த தெய்வத்திருமிகளை, செப்பேடுகள் அனைத்தும் சீர்காழி சட்டைநாதர் கோவிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தெய்வத் திருமேனிகள் செப்பேடுகள் கிடைத்த இடத்திற்கு திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் பெயர் சூட்டினார். தொடர்ந்து அந்த பகுதியில் பெயர் பலகை வைக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் பதியப்பட்டுள்ள திருமுறைகளை பேனராக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இடத்திற்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் சிறப்பு பூஜைகளை நடத்தி மகா தீபாராதனை செய்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.