உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி, கிளி வாகனத்தில் சுவாமி வீதி உலா

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி, கிளி வாகனத்தில் சுவாமி வீதி உலா

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காலையில்,பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆனந்த வள்ளி சமேத சந்திரசேகர பெருமான் அதிகார நந்தி மற்றும் கிளி வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் விநாயகருடன்,பூதம் அன்ன வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !