ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி குரு பூஜை
ADDED :939 days ago
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபாரசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு, மே 4ல், ஆதிராபசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் விழா துவங்குகிறது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், குருபூஜை நடந்தது. மே 5ல், 1,008 யாக குண்ட கலச விளக்கு பூஜையை, பங்காரு அடிகளார் நடத்தி வைக்கிறார். விழாவில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான செவ்வாடை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், வாசன், ஜெயராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.