உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம்

திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கோடையை முன்னிட்டு வசந்த உற்சவம் துவங்கியது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோயிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வசந்த உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி நேற்று முன் தினம் (26ம் தேதி), வசந்த உற்சவம் துவங்கியது . நேற்று 2வது நாள் உற்சவத்தில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் ராமானுஜ ஜீயர் முன்னிலையில் பெருமாள் கிளிக்கொரடு மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். சிறிய திருமடல் சேவையின் போது மாலை சாத்துதல், சிறப்பு தீபாராதனை நடந்தது. ராமானுஜர் உள் வீதியில் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 5ம் தேதி சித்ராபவுர்ணமியன்று 10வது நாள் வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜன்ட் பரமசிவன் தலைமையில் ஊழியர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !