உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடிகரை ரங்கநாதர் கோவிலில் திருத்தேர் விழா கொடியேற்றம்

இடிகரை ரங்கநாதர் கோவிலில் திருத்தேர் விழா கொடியேற்றம்

பெ.நா.பாளையம்: இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் திருத்தேர் விழா கொடியேற்றம் நடந்தது.

விழாவை ஒட்டி பள்ளிகொண்ட ரங்கநாதர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மே மாதம், 2ம் தேதி இரவு, 8:00 மணிக்கு அம்மன் அழைப்பும், 3ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 4ம் தேதி வியாழக்கிழமை காலை, 7:45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் தேதி குதிரை வாகனம், பார்வேட்டை நடக்கிறது. மறுநாள் சேஷ வாகன புறப்பாடு, 7ம் தேதி இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !