உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பல்லடம்: ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க, சித்தம்பலம் புதூர் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பல்லடம் அடுத்த, சித்தம்பலம் புதூர் கிராமத்தில் விநாயகர் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஏப்., 24 அன்று விநாயகர் வழிபாடு, கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம், தன பூஜை ஆகியவற்றுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து, முளைப்பாளிகை எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல் இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வி உள்ளிட்டவை நடந்த. நேற்று காலை 5.30 மணிக்கு நான்காம் கால வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, 9.30 மணிக்கு தீர்த்த கலசங்கள் வலமாக எடுத்து வரப்பட்டன. ஓம்சக்தி பராசக்தி கோஷங்கள் முழங்க விநாயகர், மாகாளியம்மன் மற்றும் கன்னிமார் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சிவன்மலை சிவாச்சாரியார் ஜெகதீச ஈசானன் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்திக் கொடுத்தனர். சிறப்பு அலங்காரத்தில், விநாயகர் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !