செஞ்சி ரேணுகாம்பாள் கோவிலில் 3ம் தேதி திருத்தேர் உற்சவம்
ADDED :930 days ago
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவிலில் மூன்றாம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.
செஞ்சி சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 26 ஆம் தேதி காலை முகமாரியம்மன், ரேணுகாம்பாள், மாரியம்மன், பரசுராமருக்கு விசேஷ அபிஷேக அலங்காரம் செய்தனர். அன்று பகல் ஒரு மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. 27ம் தேதியில் இருந்து தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வருகின்றனர். இரவு சாமி வீதி உலா நடந்து வருகிறது. முக்கிய விழாவான திருத்தேர் உற்சவம் 3 ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை குளக்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரக ஊர்வலமும், 11 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.