உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி

கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி

 பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டியில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 26 ம் தேதி காலை சிறப்பு பூஜைகள், கொடியேற்று விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு கூத்தாண்டவருக்கு கண் திறப்பு, ஆடுகள் பலி கொடுத்தல் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10-30 மணிக்கு கோவில் பூசாரி ஆசை, திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து தாலி அறுப்பு, பூஜைகள் நடக்கிறது. பொதுமக்கள், திருநங்கைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !