மேலுார் லெட்சுமி கணபதி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1259 days ago
மேலுார்: மேலுார் ஜோதிநகரில் லெட்சுமி கணபதி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 2 யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம்கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார்கள் பிச்சை, சொக்கலிங்கம் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.