உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சப்தமாதா திருவிளக்கு பூஜை நடந்தது.

திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வெள்ளி கவசத்திலும், உற்சவர் அமிர்தகடேஸ்வரர் அலங்காரத்தில் அருள் பாலித்தனர். பெண்கள் பலரும் பங்கேற்ற சப்தமாதா திருவிளக்கு பூஜை, ஷோடசோபசார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர். விழா குழுவினர் இரவு 10:00 மணிக்கு நிலாச் சோறு உண்ணும் வைபவத்தை நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !