பழநி மலைக்கோயிலில் குரங்கு பிடிக்க கூண்டு
ADDED :1055 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் சுற்றி திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். பழநி மலைக்கோயிலில் வெளிப்பிரகாரத்திலும், உட்பிரகாரத்திலும் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவை அவ்வப்போது பக்தர்களிடம் உள்ள உணவுப் பொருட்களையும், கூல் ட்ரிங்கையும் வாங்கி உண்ணும். இதனையடுத்து பழநி வனத்துறையினர் மலைக்கோயில் வெளிப் பிரகாரத்தில் குரங்கு கூண்டு அமைத்துள்ளனர். குரங்குகளுக்கு, பிடித்த கூல்ட்ரிங், பழங்கள் சிப்ஸ் பாக்கெட் ஆகியவை வைத்துள்ளனர். இதில் பிடிபடும் குரங்குகளை வன பகுதியில் விட திட்டமிட்டுள்ளனர்.