முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :989 days ago
போத்தனூர்: மேட்டூர் அடுத்து கணேசபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில், 37ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 1ல் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது. 2ல் குத்துவிளக்கேற்றுதல், கொடி கட்டுதல், கம்பம் நடுதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், இரவு திருக்கல்யாணமும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை மூரண்டம்மன் கோவிலிலிருந்து, அம்மன் சக்தி கரகங்களுடன் ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடைகிறது. மதியம் அக்னி அபிஷேக அலங்கார ஆராதனை, பொங்கல் வைத்தலும் மாலை மாவிளக்கு வழிபாடும் நடக்கின்றன. நாளை காலை மஞ்சள் நீராடுதலும், மறுநாள் காலை துவங்கி, மதியம் வரை 108 வலம்புரி சங்கு பூஜை, சிறப்பு மகா அபிஷேக அலங்கார ஆராதனை, மறு பூஜைகள் நடக்கின்றன. 14ம் தேதி காலை கருப்பராயன் பூஜை நடக்கிறது.