பழநிக்கு பக்தர் வருகை அதிகரிப்பு
ADDED :1253 days ago
பழநி: பழநி மலைக்கோவிலுக்கு பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த நிலையில், அக்னி நட்சத்திர திருவிழா வை தொடர்ந்து உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது
பழநி கோயிலுக்கு அக்னி நட்சத்திர திருவிழாவை முன்னிட்டு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். கடம்ப மலர்களை கையில் ஏந்தி பக்தர்கள் கிரிவலம் வந்து வருகை புரிகின்றனர். திருச்சி மாவட்டத்திலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து அலகு குத்தி வருகை புரிந்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், ரோப் கார், தரிசன வழியில் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.