கடவுளை இழிவுபடுத்துவோரை தண்டிக்க தனி சட்டம்: ஜீயர்
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில், ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்துவோரை கடுமையாக தண்டிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும், என, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தி உள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் கூறியதாவது: உலகமே போற்றி வணங்கும் ராமர், சீதை குறித்து இழிவாக பேசியவரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் ஆண்டாள், முருகன் பற்றி அவதுாறாக பேசியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை; தற்போதும் அதே நிலை தான். ஹிந்து கடவுள்களை இழிவாக பேசுவோரால் தமிழக முதல்வருக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அத்தகையோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், இவர்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என முதல்வரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.உலக அளவில், ஹிந்து மதம் குறித்து அவதுாறாக பேசுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.