உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் புஷ்ப ஊஞ்சல் உற்சவம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் புஷ்ப ஊஞ்சல் உற்சவம்

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் புஷ்ப ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், ஏப்., 7ல் சித்திரை திருவிழா. கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. தொடர்ந்து திருப்பூச்சாற்று, கரக ஊர்வலம், உபயதாரர்கள் சார்பில் திருத்தேர் ஊர்வலம், பூ குண்டம் இறங்குதல், முத்து பல்லக்கு, புஷ்ப பல்லக்கு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, பிராமண சமுதாயத்தினர், பராசக்தி மன்றத்தினர் சார்பில், புஷ்ப ஊஞ்சல் உற்சவத்தில், அம்மன் பவனி வந்தார். இதில், மகா அபிஷேகம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், விளக்கு பூஜை, கஞ்சி வார்த்தல் உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. இன்று மறுபூஜையுடன் இந்த ஆண்டு விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !