உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தையனார் கோயில் வடம் எடுத்தல் விழா

சாத்தையனார் கோயில் வடம் எடுத்தல் விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மகா சாத்தையனார் கோயில் எருதுகட்டு விழா, மே 6ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் 6ஆம் நாளான நேற்று, வடம் எடுத்தல் விழா நடைபெற்றது. கோயிலில் இருந்து கயிற்று வடத்தை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஊரின் நடுவே உள்ள, அரச மரத்தில் வடத்தை வைத்து வழிபாடு செய்தனர். முக்கிய விழாவான, எருகட்டு விழா நாளை ( மே 13) நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !