உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா: பெண்கள் வழிபாடு

பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா: பெண்கள் வழிபாடு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் நேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப்பெருவிழா மே11ல் கொடியேற்றப்பட்டு நடந்து வருகிறது.  நான்காம் திருநாளை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணி அளவில் பொங்கல்விழா நடந்தது. விழாக்குழுவின் சார்பில் பெண்களுக்கு பொங்கல் பொருட்களான பால், அரிசி, வெல்லம், பூ உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. முன்னதாக மூலவர்களான சப்த மாதாக்களுக்கு  சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. சந்தனகாப்பு ராஜாங்க கோலத்தில் அம்மன் பக்தர்களுக்குஅருள்பாலித்தார். தொடர்ந்து பெண்கள் கோயில் வளாகத்தில்  பொங்கல் பானைகளை வைத்து பொங்கலிட்டனர், பச்சை பனை ஓலையால் எரியவைத்து, புதிய பானையில் பால் பொங்கிய பொங்கலை அம்மனுக்கு படைத்தனர். பின்னர் இரவில் அம்பாள் சர்வ அலங்காரத்தில் திருக்குளம் வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !