தில்லை சிவ காளியம்மன் கோயிலில் எமனுக்கு அமுது படையல்; அம்மனுக்கு வளைகாப்பு
ADDED :974 days ago
அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி வயித்துமலை அடிவாரத்தில் ஓம் சிவசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள தில்லை சிவ காளியம்மன் எமனுக்கு அமுது படையல் மற்றும் வளையல்காப்பு விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு 27 விதமான அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அம்மனுக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. பக்தர்களுக்கு பலவகை உணவுகள் வழங்கினர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.