நாகசக்தி அம்மன் பீடத்தில் போகர் குரு பூஜை
ADDED :1078 days ago
மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியில் நாகசக்தி அம்மன் தியான பீடம் உள்ளது. இங்கு பழநியிலுள்ள முருகன் கோவில் நவபாஷான சிலையை உருவாக்கிய போகர் மாமுனிவரின் ஜென்ம நட்சத்திரமான, வைகாசி மாத பரணி நட்சத்திரத்தில் நேற்று குரு பூஜை நடந்தது. சிவசண்முக பாபு சாமிகள் தலைமையில் நடந்த பூஜையில் போகரின் உருவ சிலைக்கு மலர் அலங்காரம். செய்யப்பட்டது. உலக நலன், தொழில், ஐஸ்வர்ய வளங்கள் மற்றும் கொடிய நோய்கள் மக்களை பாதிக்காமலிருக்க வேண்டி, 108 மூலிகைகளை கொண்டு யாக பூஜை நடந்தது. திரளானோர் பங்கேற்று போகரை வழிபட்டு சென்றனர்,