150 ஆண்டு பழமையான முத்தாலம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :882 days ago
காரியாபட்டி: காரியாபட்டி ஜோகில்பட்டியில் 150 ஆண்டுகள் பழமையான முத்தாலம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இக்கோயில் கட்டடம் முழுவதும் கற்களால் கட்டப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை குதிரை எடுப்பு, அம்மன் உருவ சிலை எடுக்கும் விழா 7 நாட்கள் நடைபெறும். கோயில் சிலைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதால், எந்த ஒரு சேதாரமும் இன்றி இன்று வரை தத்ரூபமாக காட்சியளிக்கிறது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.