புவனேஸ்வரி அம்மனுக்கு செவ்வாய் சிறப்பு பூஜை; பக்தர்கள் தரிசனம்
ADDED :885 days ago
கோவை ; சுந்தராபுரம் காமராஜ் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ்-1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் வைகாசி இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு புவனேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்.