மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :949 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே மேலச்சின்னணம்பட்டியில் மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மன் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.