உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்துார் வெங்கடாசலபதி கோயில் தேர் நிலைக் கால் சேதம் ; பக்தர்கள் வேதனை

சாத்துார் வெங்கடாசலபதி கோயில் தேர் நிலைக் கால் சேதம் ; பக்தர்கள் வேதனை

சாத்தூர்: சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் தேர் நிலை கால் மண்டபத் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து வருகிறது. சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் 600 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். ஒவ்வொரு வருடமும் ஆனி மாதமும், சித்திரை மாதமும் இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் பெருமாள் சுவாமி திருத்தேரில் வீற்றிருந்து நான்கு ரத வீதி வழியாக பலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதற்காக கீழ ரத வீதியில் தேர் நிலை கால் மண்டபம் உள்ளது. பழமையான இந்த மண்டபத்தில் தேருக்கான தடிகள் மற்றும் சிற்பங்கள் வைக்கப்பட்டு உள்ளன. பல நூறு வருடங்கள் பழமையான இந்த மண்டபத்தை சீரமைத்து பல வருடங்கள் ஆகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோயில் முழுவதும் சீரமைக்கப்பட்ட நிலையில் தேர் நிலை கால் மண்டபம் புனரமைக்கப்படவில்லை. தேர் நிலை கால் மண்டபத்தில் சங்கு சக்கரம் மட் டும் வைத்து விட்டு புனரமைக்காமல் விட்டு விட்டனர். தற்போது தேர்நிலைமண்டபத்தின் சுவரின் மேல் பூச்சு சேதமடைந்து.செங்கல் வெளியில் தெரியும் நிலை உள்ளது. மேலும் மண்டபத்தில் செடிகள் முளைத்துள்ளன. தேர் நிலை கால் பராமரிப் பின்றி சேதமடைந்துள்ளதால் பெருமாள் சுவாமி பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேர் நிலைக் கால் மண்டபத்தை சீரமைத்து புது வர்ணம் பூச வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !