மாதவப்பெருமாள் கோவில் புனரமைப்பு பணிகள் ஜரூர்
                              ADDED :889 days ago 
                            
                          
                          மயிலாப்பூர், சென்னையில் உள்ள வைணவ திருத்தலங்களில், மயிலாப்பூர், மாதவப்பெருமாள் கோவில் மிக முக்கியமானது. இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து, பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்ட இடைவேளைக்கு பின், இந்த கோவிலில், புதுப்பித்தல் மற்றும் பழுது பார்க்கும் பணி, கடந்த பிப்ரவரியில் துவங்கியது. தற்போது, 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. கோவில் கோபுரத்திற்கு வண்ணம் தீட்டும் வேலை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் இரு மாதங்களில், அனைத்து புனரமைப்பு பணிகளும் நிறைவடைய உள்ளன. வரும் ஆகஸ்டில், கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.