செந்தலையான் முனியப்ப சாமி கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :900 days ago
கடலாடி: கடலாடி அருகே இ.நெடுங்குளம் கிராமத்தில் உள்ள செந்தலையான் முனியப்ப சாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9:00 மணியளவில் செந்தலையான் முனியப்ப சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது. இரவில் வள்ளி திருமண நாடகம், தெம்மாங்கு இன்னிசை கச்சேரி உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை இ.நெடுங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.