பித்தளைப்பட்டி முத்தாலம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா
ADDED :834 days ago
சின்னாளபட்டி: பித்தளைப்பட்டியில் முத்தாலம்மன், பகவதி அம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில் செல்வ விநாயகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், சப்த கன்னியர், கருப்பணசாமி, மதுரை வீரன் கோயில்களில் பொங்கல் வழிபாடு நடந்தது. அம்மன் அழைப்பு, கண் திறப்பு, கிராம அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். படுகளம், மஞ்சள் நீராடலுடன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது.