காஞ்சி வைகுண்டபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு
ADDED :834 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான மே 18ல் கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்சவமும் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, 22ல் தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், ராஜ வீதிகளில் பவனி வந்தார். நேற்று முன்தினம் காலையில் பல்லக்கு, தீர்த்தவாரியும், இரவில் முகுந்த விமானம் உற்சவம் நடந்தது. பிரம்மோற்சவம் நிறைவு நாளான நேற்று காலை, சாந்தி திருமஞ்சனம், சப்தாவரணம் நடந்தது. இதில், பல வகையான திரவியங்களால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.