உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் செந்துறை முத்தாலம்மன் கோவில் திருவிழா

நத்தம் செந்துறை முத்தாலம்மன் கோவில் திருவிழா

செந்துறை, நத்தம் அருகே செந்துறை கக்கன் நகரில் உள்ள முத்தாலம்மன், கழுவடியான் சுவாமி கோவில்களில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதில் நேற்று முன் தினம் தோரணம் கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் சுவாமி கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, அங்கப்பிரதட்சனம் செய்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கக்கன் நகர் பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !