உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி: காரியாபட்டியில் அய்யனார் கோவில், சாலைக்கரை முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி கலாகர்ஷ்ணம். முதலாம் யாகசாலை பூஜை, இரண்டாம் கால பூஜை, ஸ்ரீவிஷ்ணு சங்கஸ்ர் நாம பாராயணம், சுதர்ஸன ஹோமம் தனலட்சுமி பூஜை நடந்தது. நவக்கிரக ஹோமம், , எந்திர பிரதிஷ்டை, கோபுரம் கலசம் பிரதிஷ்டை, யாகசாலை பூஜை ஜெப பாராயணம் .திரவியாகுதி, மகா பூர்ணாஹுதி முடிந்தவுடன் புனித நீர்கடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முத்தையா சுவாமி, 21, தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கல்லுப்பட்டி, புல்லூர், குல்லூர்சந்தை சிவகாசி அய்யம்பட்டி ஊர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !