உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்தூர் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே  கா.பிள்ளையார்பட்டியில் மதியாதகண்ட விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு மே 23ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. பட்டமங்களம் ஸ்தானிகர் தண்டாயுதபாணி குருக்கள்  தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜையும்,  மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு  கோ பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. தொடர்ந்து நான்காம்  கால யாக பூஜைக்கு பின் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் விமானத்திற்கு புறப்பாடாகியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை காலை 8:34 மணிக்கு மூலவர் விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர்  மகா தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரக் கிராமத்தினர் கும்பாபிேஷகத்தை தரிசித்தனர். ஏற்பாட்டினை  கோயில் நிர்வாகம், கா.பிள்ளையார்பட்டி கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !