காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவில் பிரதிஷ்டா தின விழா
ADDED :1201 days ago
சூலூர்: காங்கயம் பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நடந்த பிரதிஷ்டா தின விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 42 வது பிரதிஷ்டா தின விழா நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 8:00 மணிக்கு புனித நீர் கலசங்கள் நிறுவப்பட்டு ஹோமம் நடந்தது. 10:00 மணிக்கு ஸ்ரீ ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பகவதி சேவை, அத்தாழ பூஜைக்குப்பின் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினரும், ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தினரும் செய்திருந்தனர்.