உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் தெப்போற்சவம் துவக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் தெப்போற்சவம் துவக்கம்

திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் இன்று (மே 31ம் தேதி) துவங்கி ஜூன் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.  5 நாட்கள் நடைபெறம் விழாவில் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். முதல் நாளான இன்று ருக்மணி, சத்யபாமா சமேதராய் ஸ்ரீ கிருஷ்ணரும், 2ம் நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி அருள்பாலிக்கின்றனர். 3ம் நாள் பத்மாவதி தாயார் தெப்பல் மீது வலம் வந்து அருள்பாலிக்கிறார். ஜூன் 3ம் தேதி கஜவாகனத்திலும், 4ம் தேதி கருட வாகனத்திலும் தாயார் உலா வருகிறார். விழாவை முன்னிட்டு 5 நாட்களும் தினமும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !