காஞ்சி சங்கர மடத்தில் 130வது ஜெயந்தி விழா துவக்கம்
ADDED :908 days ago
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி, 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 130வது ஜெயந்தி விழா, சங்கர மடத்தில் நேற்று(ஜூன் 1) துவங்கியது. காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன், விழா துவங்கியது. மூன்று நாள் விழாவில், தினசரி காலை பாராயணம், மாலை, 5:30 மணிக்கு இசை கச்சேரி நடக்கிறது. வேதபாராயணம், உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், இசை கச்சேரிகள் ஆகியவை நடக்கின்றன. வரும், 3ம் தேதி, காலை, 7:00 மணி முதல், ருத்ர பாராயணம், பூஜை, ஹோமம் நடைபெறும். மதியம் 12:30 மணிக்கு அதிஷ்டானத்தில் மஹா அபிஷேகம் நடைபெறும்.