உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லநாடு பெருமாள் கோயிலில் கருடசேவை

வல்லநாடு பெருமாள் கோயிலில் கருடசேவை

வல்லநாடு: வல்லநாடு பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனிகிழமையை முன்னிட்டு கருட சேவைகள் நடந்தது. ஒவ்வோரு ஆண்டும் வல்லநாடு பகுதி பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட சேவைகள் நடப்பது வழக்கமாகும். வல்லநாட்டிலுள்ள ஆழிவிளங்கும் என்ற சக்ரபாணி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் முக்கியமான ரதவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் வல்லநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆழிவிளங்கும் என்ற சக்ரபாணி பெருமாள் கோயில் கைங்கரிய கமிட்டியினர் மற்றும் மக்கள் இணைந்து செய்தனர். வல்லநாடு அருகேயுள்ள அகரம் அஞ்சேல் என்ற தசவதார பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து இரவில் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் முக்கியமான வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அஞ்சேல் பெருமாள் கோயில் கமிட்டினர் மற்றும் அகரம் மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !