தூய மிகாவேல் ஆலய பிரதிஷ்டை விழா
ADDED :4812 days ago
தூத்துக்குடி: தூத்துக்குடி போல்பேட்டை தூய மிகாவேல் ஆலயத்தின் 95வது ஆலய பிரதிஷ்டை விழா நாளை நடைபெறுகிறது.ஆலய பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடும் நாளை மாலை ஆறு மணிக்கு தங்கம்மாள் நினைவு பாடசாலையில் அசன விருந்து நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சேகரகுருக்கள், சபை ஊழியர்கள், சபை மக்கள் மற்றும் தூய மிகாவேல் ஆலய கமிட்டியினர் செய்து வருகின்றனர்.