சூலூர் முருகன் கோவில்களில் வைகாசி விசாகம்; பக்தர்கள் வழிபாடு
ADDED :1045 days ago
சூலூர்: வைகாசி விசாகத்தை ஒட்டி, முருகன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
வைகாசி விசாகத்தை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சூலூர் சிவன் கோவில், சின்னியம் பாளையம் வேல்முருகன் கோவில், கண்ணம்பாளையம், சூலூர் பழனி ஆண்டவர் கோவில், குமரக் கோட்டம் அறுபடை முருகன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் மற்றும் காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் நேற்று அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் அருள்பாலித்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.