உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில், மே 30 அன்று வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியது. தினமும் சவுந்தரவல்லி தாயார் சமேத பெருமாள் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மாலை குதிரை வாகனத்தில் பெருமாள் வலம் வந்தார். தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு கோயிலில் வைகாசி வசந்த உற்சவ தீர்த்தவாரி நடந்தது. சிறப்பு அபிஷேகங்கள் நிறைவடைந்து, பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சிம்மாசனத்தில், இரட்டைக் குடையுடன் வீதி உலா வந்தார். அப்போது வேத பாராயணம் முழங்க, பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி சென்றனர். ரத வீதிகளில் வலம் வந்த பெருமாள் கோயிலை அடைந்து சிறப்பு தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !