திருப்பூர், விஸ்வேஸ்வரர் வீரராகவப்பெருமாள் கோவிலில் மகா தரிசனம்
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரர் வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு மஹா தரிசனம் நடந்தது.
திருப்பூர், விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 26ம் தேதி முதல் தொடங்கியது. 27ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் தினமும் சுவாமி புறப்பாடு, திருவீதி உலா நடந்தது. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 2ம்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. 3ம் தேதி (சனிக்கிழமை) பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று 5ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற்றது. இன்று 11ம் நாள் விழாவாக மகா தரிசனம் நடைபெற்றது. சுவாமி விழாவில் பிச்சாண்டவர் கோலத்தில் திருவீதி உலா, ஆதி சேஷ வாகனத்தில், தாயார்களுடன் எம்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமி அம்மன் உலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை மஞ்சள் நீரரட்டு விழா, பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 8ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.