உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடியில் பால்குடம், பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

காரைக்குடியில் பால்குடம், பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

காரைக்குடி: காரைக்குடியில், மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

காரைக்குடி பாப்பா ஊரணி மாரியம்மன் கோயில் 63 வது ஆண்டு வைகாசி பொங்கல் விழா கடந்த மே 29 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பல்வேறு சிறப்பு நடந்தது. நேற்று முளைப்பாரி, அக்கினி சட்டி பக்தர்கள் ஊர்வலமாக கோயில் வந்தடைந்தனர். இன்று காலை முத்தாளம்மன் கோயிலில் இருந்து பக்கர்கள் பாக்குடம், பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !