உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஞானசம்பந்த நாயனார் மடாலயத்தில் குருபூஜை விழா

திருஞானசம்பந்த நாயனார் மடாலயத்தில் குருபூஜை விழா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் உள்ள திருஞானசம்பந்த நாயனார் மடாலயத்தில் குருபூஜை விழா நடந்தது. இவ்விழா வைகாசி மூல நட்சத்திரத்தில் அவதரித்த திருஞானசம்பந்தருக்கு குட்லாடம்பட்டி சிவாலய மடாதிபதி சாஸ்வனாந்த தலைமையில் 17 வகையான திரவ அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் நடந்தது. பாட்டினம்பலம் குடும்பத்தினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இருளப்பன் வகையறாவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !