திருப்பதியில் ஒரே நாளில் 88 ஆயிரம் பேர் தரிசனம்; 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும், 88 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர். கோடை விடுமுறை காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. நேற்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 24 மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தர்ம தரிசனத்திற்கு, 24 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு நான்கு மணிநேரமும் பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று முன்தினம் மட்டுரம், 88 ஆயிரத்து 626 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்; 51 ஆயிரத்து 379 பக்தர்கள் தலை முடிகாணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் 3 கோடியே 29 லட்சம் ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.