ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1072 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்கு பின், பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. சம்ஹார பைரவர் மற்றும் திருவாடானை வளர்ச்சி குழுவினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.