தங்கம் வாங்க யோகம் வருது!
ADDED :1108 days ago
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை செய்யும் தில்லைவாழ் அந்தணர்கள் என்னும் தீட்சிதர்களுக்கு அக்காலத்தில் சம்பளம் தரும் வழக்கம் இல்லை. இரவு பூஜை முடித்து நடை சாத்தும் போது இங்குள்ள சுவர்ண கால பைரவர் சன்னதியில், ஒரு செப்புத் தகட்டை வைத்து விட்டு புறப்படுவர். மறுநாள் காலையில் பைரவர் அருளால் அது தங்கத்தகடாக மாறி விடும். அதையே சம்பளமாக கொள்வர். இந்த பைரவரை ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4:30– 6:00 மணி) வழிபட்டால் தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும்.