உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாள்வச்சகோஷ்டம் கோவிலில் கொடிமர பிரதிஷ்டை தின பொங்கல் வழிபாடு

வாள்வச்சகோஷ்டம் கோவிலில் கொடிமர பிரதிஷ்டை தின பொங்கல் வழிபாடு

திற்பரப்பு; வாள்வச்சகோஷ்டம் மஹிஷாசுரமர்த்தினி கோவிலில் கொடிமர பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பொங்கல் வழிபாடு நடந்தது. வாள்வச்சகோஷ்டம் மஹிஷாசுரமர்த்தினி கோவிலில் கடந்த 2000ம் ஆண்டு கொடிமர பிரதிஷ்டை நடந்தது. ஒவ்வொரு வருடமும் கொடிமர பிரதிஷ்டை நாளான ஜூன் 12ம் தேதி பொங்கல் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கொடிமர பிரதிஷ்டை நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், கூட்டு பொங்கல் சமர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடந்தது. இதை ஒட்டி நேற்று காலை கோவில் மேல்சாந்தி சங்கர நாராயணன் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அதைத் தொடர்ந்து கூட்டுப்பொங்கல் வழிபாடு நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !