/
கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இணை கமிஷனர் நியமனம்; தினமலர் செய்தி எதிரொலி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இணை கமிஷனர் நியமனம்; தினமலர் செய்தி எதிரொலி
ADDED :894 days ago
மதுரை; மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மே 23ல் இறந்தார். புதிய தக்கார் நியமிக்கப்படாததால், கோவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை; உண்டியல்களையும் திறந்து எண்ண முடியவில்லை. இதுகுறித்து, தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக தற்காலிக தக்காராக, அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரையை நியமித்து, அத்துறை செயலர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனராக கிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.