உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் மண்டு கருப்பணசாமி கோயில் திருவிழா

பெரியகுளம் மண்டு கருப்பணசாமி கோயில் திருவிழா

பெரியகுளம்: பெரியகுளம் இந்திராபுரித்தெரு மண்டு கருப்பணசாமி, காளீஸ்வரி கோயில் திருவிழா ஜூன் 6ல் துவங்கி, மாவிளக்கு, பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி ஜூன் 8 வரை திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்ற மறுபூஜையை முன்னிட்டு தீர்த்ததொட்டியிலிருந்து பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்து வந்து சுவாமிகளை வழிபட்டனர். பக்தர் அரிவாளில் ஏறி மண்டு கருப்பணசாமி வேடத்தில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை தேவேந்திர வேளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !