பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :850 days ago
கோபி: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் விழாவை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடந்தது.
பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் மற்றும் சவுந்திரநாயகி சமேத அமரபணீஸ்வரர் கோவிலில், ஐந்தாவது கும்பாபிஷேக விழா, கடந்த ஏப்.,26ல் நடந்தது. இதையடுத்து மண்டல பூஜை தொடங்கியது. விழா நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி விநாயகர் பூஜை, பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், 108 கலசாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.